ரயில் தண்டவாளத்தில் சோலார் பேனல்கள்! சுவிட்சர்லாந்தின் புதிய முயற்சி.
நிலமே தேவையில்லை,ரயில் தண்டவாளங்களே இனி மின்சாரம் தயாரிக்கும்.
சுவிட்சர்லாந்தில்ரயில் தண்டவாளங்களுக்கு இடையே கார்பெட் விரிப்பது போல சோலார் பேனல்களைப் பொருத்தி மின்சாரம் தயாரிக்கும் புதிய திட்டம் கவனம் ஈர்த்துள்ளது.
பயன்பாட்டில் உள்ள ரயில் பாதைகளுக்கு இடையே சோலார் பேனல்களை நிறுவுவதன் மூலம், கூடுதல் நிலப்பரப்பைப் பயன்படுத்தாமல் சூரிய மின்சாரம் தயாரிக்க முடியும் என்பதே இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.
சுற்றுச்சூழலுக்குபாதிப்பு ஏற்படாமல்,ஏற்கனவே உள்ள ரயில் கட்டமைப்பைப் பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்கும் இந்தத் தொழில்நுட்பம் எதிர்காலத்தில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறையில் புதிய மாற்றத்தை ஏற்படுத்துமா என்ற எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.
0
Leave a Reply